“CAA போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா”? – நெல்லை முபாரக் கேள்வி

சிஏஏ சட்ட எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்துவதா என்று எ.ஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், அரசமைப்பு சட்ட விரோத சிஏஏ சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தபோது அதற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர், “சிஏஏ சட்டத்தால் தமிழக மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சுட்டிக் காட்டுங்கள், நாங்கள் அதற்கு பதில் சொல்கிறோம். அதைவிடுத்து மக்களை ஏமாற்றி நாடகமாடாதீர்கள்.” என்று மிகவும் ஆக்ரோசமான முறையில் பதிலளித்துள்ளார்.

முதல்வரின் இத்தகைய அணுகுமுறை வேதனையளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள முபாரக், சிஏஏ சட்டத்துடன் என்பிஆர், என்ஆர்சி ஆகிய சட்ட நடவடிக்கைகள் இணையும் போது அது இந்த நாட்டின் அமைதியான சூழலை பாதிக்கும் என்று அறிவு ஜீவிகளும், பொதுமக்களும் தொடர்ந்து குரல் கொடுப்பதை நாடகம் என்று கொச்சைப்படுத்தாமல், இறுக்கமான சூழலிருந்து வெளிவந்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தமிழக முதலமைச்சர் மதிப்பளிக்க வேண்டும் என்றும், கருப்புச் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் நெல்லை முபாரக் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

What do you think?

ஆதார் பெற பொய்யான தகவல்; 127 பேருக்கு நோட்டீஸ்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு; மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் அம்பலம்!