நெல்லை மேயர் மாற்றம்..! முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட உத்தரவு..! அதிரடியாக களத்தில் இறங்கிய அமைச்சர்கள்..!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில்.., அதில் 51 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக இருக்கிறார்கள். அதில் 4 வார்டுகளிலே மட்டுமே அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக இருக்கின்றனர்..,
நெல்லையின் மேயராக இருந்த சரவணன் மற்றும் துணை மேயர் கே.ஆர்.ராஜூ பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் தங்களது வார்டுகளுக்கு அவர்கள் பணிகளை முறையாக செய்துதரவில்லை எனக்கூறி திமுக கவுன்சிலர்கள், மேயர் சரவணனுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதன் பின் சில மாதங்களுக்கு முன் திமுக கவுன்சிலர்கள் 38 பேர் மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆணையரிடம் மனுவாக அளித்துள்ளனர். அவர்களின் அந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதில் அந்த போக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.. எனினும் பல அதிருப்திகள் அடங்கியதில்லை.
லோக்சபா தேர்தலுக்குப் பின் மேயர் சரவணன் நீக்கப்படுவார் என திமுக கவுன்சிலர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட பின்னர். மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அந்த பதவிக்கு புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்காக நாளை மறைமுக தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. அதற்காக நாளை காலை 10:30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து போட்டி இருந்தால் தேர்தலை நடத்தி பிற்பகலில் முடிவு அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கவுன்சிலர்களே பெரும்பான்மை என்பதால், தலைமை அறிவிக்கும் வேட்பாளரே மேயர் ஆவார். இதுவரை நெல்லையின் மேயர் பதவிக்கு போட்டியிடவுள்ள வேட்பாளர் யார் என்பது பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை
மேயர் விவகாரத்தில் இனி எந்த ஒரு சிக்கலும் வந்து விடக்கூடாது என்பதற்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர், ஆலோசித்து மேயர் பதவிக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக திமுக சார்பில் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட திமுக கவுன்சிலர்கள் கூட்டம் இன்று காலை 11மணிக்கு மேல் நடைபெறவுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, திமுக கவுன்சிலர்களிடம் கருத்துகளைக் கேட்டு, பின்னர் தலைமையிடம் பேசி மேயர் வேட்பாளர் பெயரை அறிவிப்பார்கள் என சொல்லப்படுகிறது. தற்போதைய பொறுப்பு மேயராக செயல்பட்டு வரும் கே.ஆர்.ராஜூவும் மேயர் சீட்டுக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..