‘தேனி அருகே எருக்கம் பால் கொடுத்து பெண்சிசுக்கொலை’ தாய் மற்றும் பாட்டி கைது!

மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம் பால் கொடுத்து குழந்தையை கொலை செய்த தாய் மற்றும் பாட்டி கைது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவர்கள் தான் சுரேஷ், கவிதா தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் அண்மையில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தை பிறந்து 4 நாட்களில் வயிற்று வலியால் உயிரிழந்துவிட்டதாக கூறி அவர்கள் வீட்டின் அருகிலேயே புதைத்து விட்டனர்.

இந்த குழந்தை மரணத்தில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலை அடுத்து சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்திய விசாரணையில் இது சந்தேக மரணம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த குழந்தையின் தாயும், அவரது மாமியாரும் இணைந்து மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம் பால் கொடுத்து அந்த குழந்தையை கொலை செய்துள்ளனர். மாமியாரின் தூண்டுதலின் பேரில் இதை செய்ததாக அந்த குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அந்த குழந்தையின் தாய் மற்றும் பாட்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் உசிலம்பட்டியில் பெண் சிசுக்கொலை நடந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெண் சிசுக்கொலை நடந்திருப்பது மிகவும் வேதனையான ஒன்றாக மாறியுள்ளது. பெண்களை தெய்வமாக வணங்கும் இந்த நாட்டில் தான் பெண்சிசுக்கொலையும் நடக்கிறது என்பது மிகவும் கசப்பான உண்மையாகும்.

What do you think?

புதிய சி.ஜி.எச்.எஸ் மருத்துவமனைகள்? – வைகோவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்

’50 வயதுக்கு மேல் வெளியே நடமாட தடை’ மாநில அரசு அதிரடி உத்தரவு!