திருப்பதி லட்டில் புதிய மாற்றம்..! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட புதிய அறிக்கை..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக தினமும் லட்டு வழங்குவது வழக்கம்.., தினமும் 3.5 லட்சம் லட்டுகள் பக்கதர்களுக்காக தயார் செயப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு முதல் லட்டு தயார் செய்வதற்கு தேவைப்படும் “நெய்யை” கர்நாடக அரசின் நந்தினி பால் கூட்டுறவு விற்பனை நிறுவனம் தேவஸ்தானத்திற்கு விற்பனை செய்து வந்துள்ளது.
அதற்கு முன் 2015ம் ஆண்டு வரை 10 ஆண்டில் நந்தினி நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விற்பனை செய்து வந்துள்ளது. அதனை தொடர்ந்து 2019ம் ஆண்டு வரை தமிழகத்தை சேர்ந்த ஆவின் நிறுவனம் மற்றும் மஹாராஷ்டிராவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நெய் சப்ளை செய்துள்ளது.
இந்நிலையில் 2019ம் ஆண்டு முதல் மீண்டும் நந்தினி நிறுவனம் தேவஸ்தானத்திற்கு நெய் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை பெற்றது ஆனால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நெய் டென்டரில் நந்தினி நிறுவனம் பங்கேற்க்கவில்லை.., நந்தினி நிறுவனத்தை தேவஸ்தான நிறுவனம் புறக்கணித்து விட்டதாக சமூக வளத்தங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் முன் பேசிய தேவஸ்தானம்.., டெண்டரில் கலந்துகொள்ளாத ஒரு நிறுவனத்திற்கு எப்படி ஒப்புதல் வழங்க முடியும் தேவஸ்தானத்தை பொறுத்த வரை எங்கிருந்து “நெய்” வாங்குகிறோம் என்பதை விட.., தரமான நெய் இருக்கிறதா என்பது தான் மிக முக்கியம். அப்படி தரம் என்று வாங்கும் நெய்யை ஆய்வு செய்த பின்னரே லட்டு தயாரிப்பதற்காக வாங்குவோம்.
நெய் நிறுவனம் மாற்றப்பட்டதால் லட்டின் சுவை மாறிவிட்டது என்று அர்த்தம் அல்ல.., லட்டை பக்குவமாக தயார் செய்யும் விதத்தில் அதன் சுவை இருக்கும் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆறுமாதத்திற்கு ஒரு முறை நெய் கான டென்டர் விடப்படும்.., எந்த நிறுவனம் தரமான நெய் தருகிறார்களோ அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரி பி.ஆர்.ஓ.ரவி கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..