புதிய அரசு பேருந்து துவக்கம்..!! உற்சாகத்தில் கரூர் மக்கள்..!!
திருப்பத்தூர் மாவட்டம் , ஆம்பூர் ஆனது சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மையப்பகுதியாக உள்ளது . தற்போது இங்கு மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே சாலையில் உள்ள ஸ்லாப்புகள் பழுதடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
மேலும் இந்த பகுதியில் அசம்பாவிதம் தடுக்காமல் உடனடியாக புதிய ஸ்லாப்புகளை போட்டு சாலையை சீர் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், சி.எம்.சி விளையாட்டரங்கில் தடகள சங்கத்தின் சார்பில் வேலூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர் ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான ஜுனியர் அத்லட்டிக் சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதனை வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை தலைவர் சங்கர் விசுவநாதன் துவங்கி வைத்தார்.
இதில் 800 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளும் , சான்றுகளும் வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டிய பகுதியில் பேருந்து வசதி இல்லாமல் இருந்த நிலையில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொட்டியபட்டி பகுதியில் அரசு பேருந்தை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு கிருஷ்ணாராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி இனிப்புகள் வழங்கினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..