சென்னையின் புதிய போலீஸ் கமிஷ்னர்..! சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டது ஏன்..?
சென்னையில் கடந்த ஜூலை 5ம் தேதி இரவு மர்ம நபர்களால் வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதே சமயம் சந்தீப் ராய் ரத்தோர் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அருண் இதற்கு முன் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்தவர். இப்போது அந்த இடத்திற்கு டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்..
மேலும் இதுகுறித்து அப்போதைய காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களைச் சந்தித்து கொலைக்கான காரணம் கொடுத்து விளக்கம் அளித்தார். அதில், அரசியல் பின்னணி எதுவும் இல்லை எனவும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேட்டி அளித்திருந்தார்.
ஆனால் சில எதிர் கட்சியினர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கினர். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என சில அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதிச்சடங்கில் பங்கேற்ப்பதற்காக வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குறிப்பிட்டார். இது தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு மிக பெரிய பிளாக் மார்க்காக அமைந்துள்ளது. இந்நிலையில் தான் தமிழக அரசு இந்த அதிரடி மாற்றத்தை கையில் எடுத்துள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..