இலங்கை புதிய பிரதமர் நியமனம்…!! ஹரிணி அமரசூரிய யார் இவர்..?
இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டார்., ஆனால் அந்த ஆண்டில் அவருக்கு 3 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது.. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தனது நிலையை பல மடங்கு உயர்த்தி சாதித்துக் காட்டியுள்ளார் அநுர குமார திசநாயக்க.
இதனை தொடர்ந்து இன்று இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். அதன் பின்னர் அதிபர் திசநாயகா முன்னிலையில் புதிய அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் 10-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் 21ம் தேதி தொடங்க உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இவர் இலங்கையின் 16வது பிரதமராக பதவி யேற்றுள்ளார், இதற்கு முன் இக்கட்சியின் நாடளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், தற்போது கூடுதலாக நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், முதலீடுகள் ஆகிய பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.. இதுவரையில் இலங்கையில் பண்டாரநாயக்கா, சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஆகிய பெண் பிரதமர்கள் பதவி வகித்து வந்த நிலையில் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக ஹரிணி அமர சூரிய பதவியேற்றுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..