மோடி-டிரம்ப் சந்திப்பில் புதிய ஒப்பந்தங்கள்?

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியப் பயணத்தின்போது  பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு முறை பயணமாக வரும் 24ம் தேதி இந்தியா வர உள்ளார். இதனையொட்டி பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன, இந்நிலையில் 18,500 கோடி ரூபாய் மதிப்பிலான 24 பல்நோக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள், 11,379 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, டிரம்ப் ஆகியோரின் சந்திப்பின்போது இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

What do you think?

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு – கிராம நிர்வாக அலுவலரிடம் சிபிசிஐடி விசாரணை

தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்பு