அரவிந்த் கெஜ்ரிவில் கைது செய்யப்பட்ட வழக்கில் புது திருப்பம்..!!
டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
இதையடுத்து, டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர்.
எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அவசர வழக்காக விசாரித்த நிலையில், மனுமீதான விசாரணையை சஞ்சீவ் கண்ணா, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி பேலா திவேதி அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது
இதற்கிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் முதலமச்சராக நீடிப்பார் என்றும், சிறையில் இருந்தபடியே வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவரான அதிஷி தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..