கொரோனா ஒமிக்ராவின் மாறுதல் எரிஸ் எனப்படும் வகை வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
எரிஸ் அல்லது EG.5.1 என பெயரிடப்பட்ட புதிய கோவிட் வகை, இங்கிலாந்து முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், முன்னெச்சரிக்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. எரிஸ் ஓமிக்ரான் விகாரத்தின் ஒரு மாறுபாடாகும்,ஒமிக்ரானில் மாறுபட்ட இரண்டாவது வகைப்பாடாக உள்ளது.
இந்த எரிஸ் வகை வேகமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் மருத்துவமனையில் சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான், ஆர்க்டரஸ் மற்றும் எரிஸ் ஆகியவற்றின் துணை வகைகளால் தூண்டப்பட்ட மற்றொரு அலைக்கான சாத்தியம் குறித்து எச்சரிக்கிறது.
இதுக்குறித்து இங்கிலாந்து ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி வெளியிட்ட அறிக்கையின் படி , ஆசிய பிராந்தியங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைத் தொடர்ந்து, Eris வெளிப்படுவதை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ஜூலை மாதத்தில், எரிஸ் வகையின் வேக்ம் ஏறத்தாழ 11.8% சதவீத பாதிப்புகளில் இருந்து 14.6% மாத அதிகமாகி உளதாகவும் தெரிவித்துள்ளது.