நியூசிலாந்தில் உள்ள 4 மாடி தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூசிலாந்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் 11 பேரைக் காணவில்லை என்பதால் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூடவுனின் வெலிங்டன் சுற்றுப்புறத்தில் உள்ள லோஃபர்ஸ் லாட்ஜின் மேல் தளத்தில் நள்ளிரவுக்குப் பிறகு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தை அடுத்து மேற்கூரை இடிந்து விழுந்ததால் மீட்பு பணியில் பெரும் தாமதம் மற்றும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், 10 பேரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.