February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending விளையாட்டு

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து

3-வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுகனியில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கோலியும் 9 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்திவி ஷா 40 ரன்களுக்கு ரன் அவுட்டானார். 63 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கே.எல்.ராகுல் 112 ரன்கள் எடுத்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார். மறுமுனையில் அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் 62 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 296 ரன்கள் எடுத்தது.

297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய கப்தில் 46 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். ஹென்றி நிக்கோல்ஸ் 80 ரன்களும், காலின் டி கிராண்ட்ஹோம் 58 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். 48-வது ஓவரின் முதல் பந்தில் 300 ரன்களை எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, ஒரு நாள் தொடரில் இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது. வரும் 14 ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.

Related posts

தத்துவக் கவிஞர் குடியரசுவுக்கு வைகோ மலர்தூவி மரியாதை

Digital Team

தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் CAA எதிர்ப்பு போராட்டம்

Digital Team

மகா சிவராத்திரி; ஆலயங்களில் குவியும் பக்தர்கள்

Digital Team

மீண்டும் கவர்ச்சி, லிப்லாக் கோதாவில் களமிறங்கும் லேடி சூப்பர் ஸ்டார்!

Digital Team

வேலைவாய்ப்புகள் குறித்த வைகோவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்

Digital Team

‘கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கூறியிருக்கக்கூடாது’ – அமித்ஷா ஒப்புதல்!

Digital Team
You cannot copy content of this page
Madhimugam