இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி அபார வெற்றி!

வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்தியா 165 ரன்களுக்கும், நியூசிலாந்து அணி, 348 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 183 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 9 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி, டெஸ்ட் போட்டியில் தனது 100 வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

What do you think?

மாணவர்களிடம் ஆசிரியர்கள் நேர்மையை விதைக்க வேண்டும் – சகாயம் ஐ.ஏ.எஸ்

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு …!என்ஐஏ அதிகாரிகள் சோதனை