உங்கள் ஊர் செய்திகள், உங்கள் பார்வைக்காக..!!களத்தில் மதிமுகம்..!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அண்ணங்காரன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் .இவர் கால் ஊனமுற்ற நிலையில் சிறிது மன வளர்ச்சி குன்றியவர் என கூறப்படுகிறது.
இவர் தினமும் கொள்ளிடம் ஆற்றின் கரையின் ஓரம் தண்ணீர் ஓடுவதில் அமர்ந்து குளித்து சென்று வந்துள்ளார்.அதே போல் நேற்று குளிக்க சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை .இதனையடுத்து ஊர் பொது மக்கள் செல்வராஜை தேட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற மாயமான செல்வராஜை தா.பழூர்காவல் துறையினர் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினர் மாயமான செல்வராஜை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் திருத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியது இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களை எதிர்ப்பை வெளிப்படுத்தி வரக்கூடிய நிலையில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இன்று காலை சட்ட திருத்த நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மத்திய அரசின் திருத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட நகலை எதிர்த்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மத்திய அரசு எதிராக கோஷங்கள் எழுப்பினர் முன்னதாக குமரன் நினைவகம் எதிரே தேசியக்கொடியை ஏற்றி வைத்து உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2124 பள்ளி மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கார, மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி, துணைத் தலைவர் கஸ்தூரி உள்ளிட்ட வழங்கி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் முன்பு , என்டியுசி, சிஐடியு,எல்பி எஃப் உள்ளிட்ட மத்திய சங்கங்கள் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக் கோரியம் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியு சி மாநில துணைத்தலைவர் தேவதாஸ் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் . இதில் நீட் தேர்வு ரத்து செய்ய கோரியும் , தொழிலாளர்கள் விரோத நான்கு சட்ட தொகுக்க தொகுப்புகளை திரும்பப் பெறவும் விவசாயிகளின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் சி ஐ டி யு துணைத் தலைவர் அருள் சீனிவாசன், மணிமாறன், மதி உள்ளிட்ட மத்திய சங்கங்களை சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பகேரி ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பகேரி கிராமத்தில் சுமார் 80 க்கும் மேற்ப்பட்ட குருமன்ஸ் இனமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஊராட்சி நிருவாகம் சிலமாதங்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய் அமைத்து வரும் கழிவு நீர் மற்றும் மழைநீர் ஆகியவற்றை சுடுகாட்டில் திருப்பி விடப்பட்டு தண்ணீர் தேங்கி சடலங்கள் தண்ணீரில் மிதக்குவதாக குற்றசாட்டு முன் வைக்கின்றனர்.
ஊராட்சி நிருவாகத்திடம் பலமுறை கூறியும் கிராம சபை கூட்டத்தில் பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென்று ஜலக்காம் பாறை பகுதியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் 50 க்கும் மேற்பட்ட வர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் தெரிந்து வந்த கிராமிய போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட வர்களிடம் ஊராட்சி நிறுவாகத்திடம் கூறி கழிவு நீரை அப்புறப்ப படுத்த நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூரியதின் அடிப்படையில் மறியலை கைவிட்டு சென்றனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..