உங்கள் ஊர் செய்திகள்..! உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்…!!
வேலூர் மாவட்டதில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு புராட்டாசி மாதம் 4 ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு துளசி மாலைகள், சாமந்தி மாலைகள் உள்ளிட்ட மலர்மாலைகளால் சிறப்பு அலங்காரங்களை செய்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனைகள் நடைப்பெற்றது. இதில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் நந்திமங்கலம் காலணியில் சுமார் 35 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்த கிராமத்தில் மாயனத்திற்க்கு பாதை அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்து பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வயது முதிர்வு காரணமாக காலமானார். சடலத்தை எடுத்துச் செல்ல பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள தென்திருப்பதி என அழைக்கப்படும் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து திருக்கல்யாண உற்சவமும், கோவில் தேரோட்டமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. பின்னர் பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் தலங்கை ஊராட்சிக்கு உட்பட்ட புதுலோகாபுரம் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம், மேல் நீர் தேக்க தொட்டியை முறையாக சுத்தம் செய்யாததாலும், தற்போது குடிநீர் துர்நாற்றம் வீசியும், மண் கலந்து நீராக விநியோகம் செய்யப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதை தொடர்ந்து கிராமத்திற்க்கு தேவையான சாலை, முறையாக குடிநீர் வழங்கவும், தெரு விளக்கு அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் சாலையின் தாழ்வான பகுதிகளின் ஒரு சில இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் கழிவுநீர் செல்ல முறையான கால்வாய் வசதி இல்லாததால், மழைநீரோடு கழிவுநீர் சேர்ந்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்து பயணம் செல்ல வருபவர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..