உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி பெருக்கை முன்னிட்டு செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து மலர்மாலைகள் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து தீபாராதனை நடைபெற்றது இதில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தினுள் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு புஷ்ப அங்கி அலங்காரங்கள் செய்து அம்மன் ஊஞ்சல் சேவையும் தீபாராதனைகளும் நடந்தது இதே போன்று வேலூர் சலவன்பேட்டையில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி சமேத அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் அங்காலபரமேஸ்வரி அம்மனுக்கு சாக்லேட்டுகளை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து தீபாராதனைகள் நடந்தது.
இதே போன்று வேலூர் டிட்டர் லைன் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் கருமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும் மகாதீபாராதனைகளும் நடந்தது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு கடந்த ஒன்றாம் தேதி முதல் 5ஆம் தேதி வரை ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் மதியத்தில் இருந்து பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டதால் வனத்துறை கேட்டின் முன்பு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.எனவே தொடர்ச்சியாக பக்தர்கள் மலைப் பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் நாள்தோறும் வாலாஜாபாத் ரயில்வே நிலையத்திலிருந்து ரயில் மூலமாக பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பணி நிமித்தமாகவும் தன் சொந்த வேலைகளுக்காகவும் சென்று வருகின்ற சூழ்நிலையில் விடியற் காலையிலும் இரவு நேரங்களிலும் ரயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையம் வருபவர்களுக்கு கிதிர பேட்டை கூட்டு சாலையில் இருள் சூழ்ந்து இருக்கின்ற காரணத்தினால் விஷப் பூச்சிகள் உலாவுகின்றன.
மேலும் வாகன விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது ஆகவே அப்பகுதியில் மக்கள் நலனுக்காக உயர் கோபுர மின் விளக்கு அமைத்துக் கொடுத்து மக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்று பேரூர் மதிமுக செயலாளர் சிவகுமார் அவர்கள் பேரூராட்சி தலைவர் செயல் அலுவலர் அவர்களிடத்தில் மனு ஒன்றினை கொடுத்துள்ளார் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென்று அப்பகுதி மக்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அடுத்த ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு காவலர்கள், மற்றும் காவலர்களின் மகன்கள் உள்ளிட்டோரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதவும் அதேபோல் உதவி ஆய்வாளர் தேர்வு எழுத பயன்படும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுத்திறன் நூலகத்தை திறந்து வைக்க காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார்.
அப்போது போலீசார் அவரை உற்சாகமாக வரவேற்றனர் இந்த நிலையில் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றார். அதன் பின்னர் அறிவுத்திறன் நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் நூலகத்தில் என்னென்ன புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன எனவும் பார்வையிட்டார்.மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட காவல்துறையினர் பலர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டம் கீழையூர் கிராமங்களில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மேலும் அரிசி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பாமாயில் மாதிரிகளை அவர் பார்வையிட்டார். அப்போது, ஊழியர்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதலை அவர் தொடக்கி வைத்தார். பின்னர், கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுப்போம், டிபிசி, வேளாண்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்கு பாலமாக செயல்படும் என்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..