உங்கள் ஊர் செய்திகள்.. உங்கள் பார்வைக்காக..! களத்தில் மதிமுகம்..!!
தூத்துக்குடி மாவட்டம் :
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் எட்டயபுரம் சாலையில் தலைமை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தொழிலாளர்கள் தலைமை தபால் அலுவலகத்தினை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பதிவு தபால் அனுப்பும் பகுதியில் சமீபகாலமாக அந்த பிரிவில் வட மாநிலத்தை சேர்ந்த ஊழியரை பணியில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது.
அந்த ஊழியருக்கு தமிழ், ஆங்கிலம் தெரியவில்லை, ஹிந்தி மட்டும் தெரிவதால் வழக்கறிஞர் பரத் என்பவர் பதிவு தபால் அனுப்ப சென்ற போது தமிழ், ஆங்கிலத்தில் இருந்தால் பதிவு தபால் அனுப்ப முடியாது,, ஹிந்தியில் இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும், தனக்கு, தமிழ், ஆங்கிலம் டைப் செய்ய தெரியாது என்று அலட்சியமாக கூறியுள்ளார்.
இதையடுத்து வழக்கறிஞர் பரத் மற்றும் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதிவு தபால் அனுப்ப முடியாமல் பரிதவித்துள்ளனர். இதையடுத்து அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி,, இது குறித்து தலைமை தபால் அலுவலக அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். . தமிழ், ஆங்கிலம் தெரியாமல் ஹிந்தி தெரிந்தவரை மட்டும் பணியில் அமர்த்தி உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக கூறியுள்ளனர் .
ராணிப்பேட்டை மாவட்டம் :
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் இருளர் காலனி பகுதியை சேர்ந்த மணி ஐப்பேட்டில் உள்ள அவரது அப்பா, அம்மா இதுவரையும் பார்த்துவிட்டு வெங்கப்பட்டு சமுதாயக்கூடம் அருகே வந்தபோது இருவர் வழிமறித்து கத்தியை காண்பித்து பணத்தை எடு என்று கூறி வண்டியில் இருந்த பையை எடுத்து பிரித்துப் பார்த்தபோது பணம் இல்லாததால் வண்டி எடுத்துச் சென்று விட்டனர். என சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட வெங்கப்பட்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித் , மதன் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் :
திருவள்ளூர் மாவட்டம், நந்தியம் பாக்கம் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரில் குறைந்த அளவிலான மின்சப்ளை காரணமாக இரவில் வீட்டு உபயோக பொருட்களான மின்விசிறி, டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் இயங்காததால் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை என பல முறை இது குறித்து மின் துறைக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் இன்று மேலூரில் அமைந்துள்ள துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் உதவி செயற்பொறியாளரிடம் இது குறித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களுடன் கலந்து பேசிய அதிகாரிகள் இன்னும் ஒரு நாட்களுக்குள் புதிய மின்மாற்றி எனப்படும் டிரான்ஸ் பார்மர் அமைத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி அய்யாசாமி வட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி என்பவர் 6ஆடுகள் வளர்த்து வருகிறார். இதனையடுத்து நேற்று வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று 6 ஆடுகளையும் ஆட்டு கொட்டகையில் கட்டி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் காலையில் வீட்டிலிருந்துஅவர் ஆடுகளை அவிழ்த்து விட சென்றுள்ளார்.
அப்போது மூன்று ஆடுகள் சிறுத்தை கடித்து அங்கேயே உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் பின்னர் இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்து சிறுத்தை கடித்து உயிரிழந்து இருக்குமா என பெரும் அச்சத்தில் உள்ளனர்..
ஆற்காடு மாவட்டம் :
ஆற்காடு அருகே வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த சுனில் தனது நண்பர்களுடன் குடிபோதையில் முதலாளி சதிஷ்குமார் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டு ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு நகர போலீசார் இறந்து கிடந்த சதீஷ்குமாரின் உடலை மீட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். குடிபோதையில் நண்பர்களுடன் தாக்குதல் நடத்தி கொலை செய்த நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் :
தென்காசி நகரின் மத்திய பகுதியில் 1923 ம் ஆண்டு துவங்கப்பட்டு ஐ.சி.ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி துவங்கப்பட்டு நூற்றாண்டை கடந்த நிலையில் பள்ளியின் நுழைவாயில் பகுதியில் இருந்த சிறிய அளவிலான வளைவு முன்னாள் மாணவரும் தென்காசி நகர் மன்ற தலைவருமான சாதிர் ஏற்பாட்டில் ரூ.7 லட்சம் செலவில் புதிதாக நூற்றாண்டு வளைவு அமைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற அதன் திறப்பு விழாவுக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமை வகித்தார். இதில் தென்காசி நகர் மன்ற தலைவரும் பள்ளியின் முன்னாள் மாணவருமான சாதிர் பங்கேற்று நூற்றாண்டு நுழைவு வளைவை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..