உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த அமைச்சர் மெய்யநாதன், முதலமைச்சர் அறிவித்த 3 லட்ச ரூபாய் அரசின் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்
திருப்பத்தூர் அருகே சிசிடிவி கேமராவை திசை திருப்பிவிட்டு வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 20 சவரன் தங்கநகையை கொள்ளை அடித்து சென்றுள்ளனர் . இது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காந்திநகர், வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி. ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. ஒவ்வொரு பூத் ஏஜென்டிடமும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் குறித்து ஆய்வு செய்து அறிவுரை வழங்கி உறுப்பினர்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 6 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த இரண்டு இளைஞர்களை மதுவிலக்கு அமலாக்குத்துறை காவல் துறையினர் கைது செய்தனர்.மேலும் விசாரணை மேற்கொண்டதில் வெள்ளி சந்தை அருகே கெட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவரது மகன் தமிழரசன் என்பதும் மற்றும் பாலகோடு நகரப் பகுதியைச் சேர்ந்த மாதேஸ் என்பவரின் மகன் மணிகண்டன் என்பதும் தெரிய வந்தது. பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள தனலட்சுமி மில் பல ஆண்டுகளாக செயல்படாமல் கிடக்கும் நிலையில், இங்குள்ள பெரிய மரங்கள் பலவற்றில் பல ஆயிரக்கணக்கான வவ்வால்கள் கூடுகட்டி வசிக்கின்றன. வவ்வால்களில் எச்சத்தால் குடியிருப்பு பகுதிகள் துர்நாற்றம் வீசுவதுடன், வவ்வால்களால் பரவக்கூடிய நிஃபா உள்ளிட்ட கொடூரமான வைரஸ் நோய்கள் பரவக்கூடும் எனவும், வவ்வால்களை அப்புறப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் கிருபானந்த வாரியார் சாமி 118-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் ஆர்.மோகன்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கே. ஸ்ரீதர் வரவேற்றார். விழாவையொட்டி கிருபானந்த வாரியார் உருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரது கிருபானந்த வாரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..