உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
மதிமுக சார்பில் பெரியாருக்கு மரியாதை :
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாளையொட்டி அவரின் உருவ சிலைக்கு மதிமுக நகர ஒன்றியம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர், ஒன்றிய செயலாளர்,நகர பொருளாளர் மற்றும் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கரூர் திருமாநிலையூரில் தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு திமுகவினர் மற்றும் திராவிட கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் மேயர் கவிதா மற்றும் துணை மேயர் தாரணி சரவணன், உள்ளிட்ட திமுக அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சமூக நீதி, சமத்துவம் காக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
தூத்துக்குடியில் சமூக நீதி போராளி பெரியாரின் 146 பிறந்தநாளையொட்டி அவரின் திருவுருவச் சிலைக்கு திமுக சார்பில் மாநகராட்சி மேயரும், பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதிநாளாக கடைபிடிக்கப்படும். என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த உதரவின் பேரில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் கீழ முக்கூட்டு பகுதியில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு திமுக சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து திமுக நிர்வாகிகள் சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதில் திமுகவினர் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி நகர பகுதியில் தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் நகர கழக செயலாளர் நாட்டான் மாது தலைமையில் அவரின் திருவருவுச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அதிமுக சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தலைமையிலும் மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ராமதாஸ் தலைமையிலும் மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் அமமுக,விசிக, தமிழக வெற்றி கழகம், உள்ளிட்ட கட்சிகள் பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பூரில் இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு மீலாது கமிட்டியின் தலைவர் சையது முஸ்தபா தலைமையில் நபி புகழ் பாடும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளிவாசலின் தலைவர் சிராஜுதீன் சமாதான புறாவை பறக்கவிட்டு துவக்கி வைத்தார். இந்த பேரணியில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமியர்கள், அணைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேணவேண்டும் ,அமைதியை காக்கவேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
நபிகள் நாயகம் பிறந்தநாள் கொண்டாட்டம் :
வேலூர்மாவட்டம் சார்பனாமேடு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இஸ்லாமிய மக்கள் தொடர் அன்னதானம் வழங்கி வந்தனர். அதே போல் இந்த ஆண்டும் 1000 கிலோ அரிசி கொண்டு உணவு சமைத்து சாதி மத பாகுபாடில்லாமல் அனைத்த தரப்பு மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள் மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றனர்.
மக்கள் பசியாற உணவளித்து மிலாடி நபி திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர் காலை முதல் இரவு வரையில் இந்த தொடர் அன்னதானம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..