உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
கரூர் மாவட்டம் :
கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள ஒரு வழி ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த இரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் காரைக்கால் எக்ஸ்பிரஸ் அவ்வழியில் செல்லாமல் 100மீட்டருக்கு முன்னரே நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் :
ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாத்திமா லெதர்ஸ் தனியார் தோல் தொழிற்சாலை வெளியே உள்ள குப்பை கழிவுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்து தீயணைப்பு துறையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இதற்கிடையில் அப்பகுதி முழுவதும் துர்நாற்றத்துடன், கரும்புகை சூழந்ததால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், இதயக் குறைபாடு மற்றும் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. எனவே இத்தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை :
சென்னை போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனையில், மூதாட்டி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வந்துள்ளார். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாததால் மாற்று மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து ஊழியர்கள் உரிய பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிகிச்சைக்கு வந்த நடிகர் கஞ்சா கருப்பு பொதுமக்களோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருவள்ளூர் :
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் சித்ராதேவி மற்றும் ரயில்வே இருப்புப் பாதை துணை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில், பெண்களின் பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் காலியாக உள்ள பெட்டிகளில் ஏறுவதை தவிர்க்க வேண்டும் என்றும், ஆபத்து காலங்களில் 182 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..