உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆணைக்கிணங்க பொதுவுடமை சிந்தனைகளை, தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவரது பிறந்த நாளையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் தமிழக வெற்றி கழக தெற்கு மாவட்ட தலைவர் பிரகாசம் தலைமையில், அக்கட்சி உறுப்பினர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அரியலூரில் சத்துணவு திட்டத்தின் மூலம் சிறுதானிய உணவு திருவிழாவில் சிறுதானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தொடங்கி வைத்தார். இதில் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
ராணிப்பேட்டை பழைய பாலாறு மேம்பாலத்தின் மீது கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்துகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த லோடு ஆட்டோ ஓட்டுனரின் கவனக்குறைவால் கம்பத்தின் மீது மோதி விபத்துகுள்ளானது. ஓட்டுனர் லேசான காயங்களுடன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் மற்றும் ராஜ்புத் ரமேஷ் ஆகிய இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி பிறந்தநாளை முன்னிட்டு ரியல் எஸ்டேட் எழுச்சி தின நாள் கூட்டம், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய நிர்வாக செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் சென்னை வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் , ஆம்ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வசீகரன், தமிழ் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஜியாவுதீன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி, திருபோரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூரில் நில ஆவணங்களை நவீன மயமாக்கும் ஒன்றிய அரசின் நக்சா நில அளவை திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் அரியலூர் நகராட்சியில் ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு ஒளிபடம் உருவாக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் ஏதேனும் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் உரிய அலுவலரிடம் மேல்முறையீடு செய்து கொள்ளும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் புதிய மதுபான கொள்கையை கைவிட வேண்டும், புதிய மதுபான கடைகள் மற்றும் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி தரக் கூடாது என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..