உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்..!!
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள், 7 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில் குற்றங்கள் உறுதியாக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது போக்ஸோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த தேஜல் என்ற மாணவி, அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அகற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியில் 20க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.
புதுச்சேரி மாநிலம் கோரிமேடு ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்த சஞ்சய் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு வீச்சரிவாளுடன் கடைக்காரர்களை மிரட்டி பண வசூல் செய்தும், பட்டாகத்தியை சுழற்றிய படி ரீல்ஸ் செய்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சஞ்சயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த முருகேசன் வாகன பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பரம்பூரைச் சேர்ந்த சீமான் என்பவரது வாகனத்தை பழுது பார்த்தபோது அதில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு பாம்பை உயிரோடு மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..