உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்…!!
மயிலாடுதுறை மாவட்டம் காலபைரவர் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு பல்வேறு திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருமணத்தடை நீங்கவும், நினைத்த காரியம் கைகூடவும், தேங்காய், பூசணிக்காய், பாகற்காய் இவற்றில் தீபமிட்டு ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பங்களா மேடு கிராமத்தில் உள்ள பங்களாவில் இருந்து 18 ஆண்டு நூற்றாண்டை சேர்ந்த பழமையான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் அங்கு வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் தொல்லியல் துறை சம்பந்தமான முன்னெடுப்புகளுக்கு கூடுதல் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாளை மார்க்கெட் அருகே பாத்திமா என்கிற மூதாட்டி குழாயில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் 2 ½ பவுன் தங்க நகையை பறித்து சென்று, அவரையும் தாக்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மார்க்கெட் பகுதியில், மர்ம நபர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ஜே பி நகர் பகுதியைச் சேர்ந்த குமரவேல் என்பவருக்கு சொந்தமான, பனியன் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வடக்கு தீயணைப்புத்துறையினர், 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அன்னை வேளாங்கண்ணி மாதா கல்வியில் சமூக நல அறக்கட்டளையின் புதிய அலுவலக கட்டடத்தை எச்.டி.எப்.சி வங்கி கிளை மேலாளர் கபிலன் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து 50 மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்பினை அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..