உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த ஸ்ரீசக்திபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வெட்காளி அம்மன் கோயிலில் உலக மக்கள் நன்மை பெற வேண்டியும், மழை வேண்டி மிளகாய் யாகம் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு மிளகாயை, யாக வேள்வியில் கொட்டி வழிபட்டனர். இதில் கர்நாடக, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஆனைமலை வனப்பகுதிக்கு உட்பட்ட உடுமலை மூனாறு சாலையில், காட்டு யானை ஒன்று வலம் வந்துள்ளது. இதன் ஆபத்தை உணராத சிலர் அவ்வழியாக காரில் சென்று அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், சீர்காழி குணசேகரன் கதைக்களத்தில், ஜே. பி. கம்பெனி தயாரிப்பிலும், இயக்குனர் பாலு ஜெனிஃபர் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் அனீஸ் கதாநாயகனாகவும், புதுமுக நடிகையாக கங்கா நடித்துள்ளனர். இப்படப்பிடிப்பினை பொதுமக்கள் ஆர்வமாக கண்டுகளித்தனர்.
அரியலூர் மாவட்டம் ஆட்சியர் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு மழைநோய் தாக்குதலால் ஏற்பட்டுள்ள மகசூல் இழப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் கோவை தோட்டம் பகுதியைச் சேர்ந்த உசேன் தனது நண்பர்களுடன் மது அருந்திய நிலையில், சிலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதால் நண்பர்கள் அவரை தனியே விட்டு சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், இரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுக்குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் ரசாயனம் இல்லாத இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திறந்து வைத்தார். முன்னதாக, அவர் மறுசுழற்சி இயந்திரத்துக்கு தீபாராதனை காட்டி வழிபாடு பணிகளை தொடக்கி வைத்தார். மேலும் தினந்தோறும் வீணாகும் பூக்கள் மற்றும் மரக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகையிலும், பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இந்த இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உலக தாய்மொழி தினத்தையொட்டி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உலக தாய்மொழி நாள், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வாசிக்க அனைத்துறை அதிகாரிகளும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும் அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையெழுத்திடுவோம், குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..