உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பக்தர்கள் மழை மீது ஏற அனுமதி வழங்கபட்டுள்ளது. மேலும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு இரயில்கள் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் வடக்கு காவல்துறையினர், நடத்திய சோதனையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் மகாநந்து, என்பவரிடம் இருந்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக 19 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், மல்லாரி, வர்ணம், பித்தன் என்றாலும் பேயன் என்றாலும், தில்லானா போன்ற நாட்டிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது. இதனை ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளி, பெங்களூரு ஸ்ரீநிதி, சென்னை தேஜஸ் நித்தியாஞ்சலி, கோவை வழுவூர் கிளாசிக்கல் பரதநாட்டிய ஹார்ட் சென்டர், ராஜமணியம்மாள் கலைக்கூடம் குழுவினர் நடனமாடி அசத்தியுள்ளனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மலை ரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த பிரபு, 6 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மேத்யூ, மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு, வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் நகர காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் அன்பரசி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 10அம்ச கோரிகக்களை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு, கடந்த ஆறு வாரங்களாக வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..