உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
கோவில்பட்டி அருகே பழனி அப்பர் தெருவை சார்ந்தவர் சதாம் உசேன்.இவரது மனைவி பாத்திமா சலிமா. இவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் தந்தை வீட்டில் உள்ளார். இந்நிலையில் மனைவியை பார்ப்பதற்காக சதாம் உசேன் இருசக்கர வாகனத்தில் பழனியில் இருந்து வந்துவிட்டு மீண்டும் பழனி நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் வந்த தனியார் மில் பணியாளர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெற்ற வெள்ளையனை வெளியேறு இயக்கத்தை நினைவு கூறும் வகையிலும், சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து பள்ளி மாணவ மாணவியர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு தபால் தலை கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியில் மகாத்மா காந்தியை கவுரவித்து இங்கிலாந்து அரசு 2021 இல் வெளியிட்ட 5 பவுண்டு சிறப்பு நாணயம், மகாத்மா காந்தியடிகள் குறித்த வாழ்க்கை வரலாறு, இதனை கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களும் கண்டுகளித்தனர். கண்காட்சியை காண வந்த அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் கோவில்பட்டி தலைமை அஞ்சலகம் சார்பில் ஊழியர்கள் கடலை மிட்டாய் வழங்கி வரவேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு காமன் கோவில் தெருவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த வீதியில் பின்பக்கமாக இருக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து நகராட்சியில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் சாலையில் கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி வாகனத்துடன் பொருட்களை பறிமுதல் செய்ய வந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீட்டின் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பொது மக்களின் பொருட்களை பறிமுதல் செய்யும் நகராட்சியின் ஒரு தலைப்பட்சமான செயலை கண்டித்து நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கட்டுமான பொருட்கள் லாரியிலிருந்து இறக்கப்பட்டது இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் அமராவதி நகர் இடையே பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை அமராவதி நகரை சேர்ந்த சிலர் தங்களுக்கான இடம் என கூறி வேலை அமைத்து தடுத்துள்ளதால் பொதுமக்கள் அவதி. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியாமலும் வாகனங்கள் தங்கள் பகுதிக்கு வர முடியாமலும் தவிப்பதாகவும் இரண்டு அடி மட்டுமே பாதை இருப்பதால் தங்களை நவீன தீண்டாமைப் படுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. வைத்துள்ளனர் .
மயிலாடுதுறை அருகே தலை ஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை 1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு 1500 டன் கரும்பு பிழியும் திறனை 3500 டன் கரும்பு பிழியும் திறன்கொண்டதாக ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த வேலையை தனியார் நிறுவனம் ஒன்று செய்துள்ளது.
இந்த விரிவாக்க பணிகள் முறையாக செய்யாததால் 3500 டன் முழு கொள்ளவை அரைக்க இயலாமல் ஆலை நட்டத்தில் இயங்கியது. இதனால் தனியார் நிறுவனத்திற்கு ரூ. 2 கோடி பாக்கியை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை.
இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் தனியார் நிர்வாகம் வழக்கு தொடுத்து நிலுவைத் தொகை அபராதத்துடன் சுமார் ரூபாய் ஆறு கோடி பெறுவதற்கான உத்தரவை பெற்றதாக கூறப்படுகிறது. விவசாயிகளின் இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு கூறிய நியைில் அனைத்து குழுவினரும் ஆய்வு செய்தும் ஆலையை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல் விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படுவதாகவும், ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..