உங்கள் ஊர் செய்திகள், உங்கள் பார்வைக்காக..! களத்தில் மதிமுகம்..!!
கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி :
அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி என் உயிரிலும் மேலான என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் அப்போது பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அனைத்து துறைகளிலும் தங்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக படிக்கும் பருவத்திலேயே பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ளும் வகையில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது இதனை மாணவ மாணவிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார் நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக இளைஞரணி நிர்வாகிகள் திமுக பேச்சாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெண்ணமடை குளத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படும் படகு சவாரி போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன், தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 10 படகுகளில் 40 பேர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் பரிசுகளும் வழங்கப்பட்டது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமத்தில் மரம் வளர்த்து, மழை பெறுவோம் எனும் தலைப்பில் டிரித்தான் எனும் பெயரில் தனியார் அமைப்பு மாரத்தான் போட்டிகள் நடந்தது . காந்திகிராமம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் ஆண்களுக்கு 7 கி.மீ தூரமும், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு 3 கி.மீ தூரம் ஓடி எல்லை தூரத்தை கடந்து வந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு நகர காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பிடித்தவர்கள், டாப் 10 வந்தவர்களுக்கு கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கி பாராட்டப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணை மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நான்கு மண்டலங்களாக பிரித்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீரை அமைச்சர் சாமிநாதன் மின் மோட்டாரை இயக்கி திறந்து வைத்தார். இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தை சுற்றி உள்ள மாவட்டங்களில் சுமார் 94 ஆயிரத்து 201 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்படுகின்றது என்றும் திறக்கப்படும் தண்ணீர் ஆனது வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு 4 சுற்றுகளில் திறக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..