நீங்கள் பார்க்க மறந்த உங்கள் ஊர் செய்திகள்..!! மீண்டும் உங்கள் பார்வைக்காக…!!
கரூர் மாவட்டம், பசுபதி பாளையம் போக்குவரத்து காவல்துறை சார்பில் 36-ஆவது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஃபெரோஸ்கான் அப்துல்லா மாணவர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு உரையாற்றி, பின்னர் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தனியார் பேக்கரி மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை கடையில் மர்ம நபர்கள் 50 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் விலை உயர்வான பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மகளிர் காவல்நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆய்வு செய்து, பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தீர்வுகாணப்பட்டுள்ள விவரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகளின் உண்மை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வேளாண்மைதுறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடி வழிபட்டனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோவிலில் 18-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மறுநாள் கோயிலில் உற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து புண்யாஹம், சங்கல்பம், ஹோமங்கள் செய்யப்பட்டு மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. அதன் சீனிவாச பெருமாள் தேர் வீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..