நீங்கள் பார்க்க மறந்த உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், 62 ஆவது மலர்கள் கண்காட்சிக்கு மலர் நாற்று நடவுப் பணிகள் நடைபெற்றது. இதில் ஆண்டி ரெய்னம், டயான்தஸ் உள்ளிட்ட 40 வகை உயர் ரக மலர்களும், ஐம்பதாயிரம் எண்ணிக்கையில் நாற்றுகளும் நடப்பட்டு வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கூடப்பாக்கம் வனப்பகுதியில் பெண் புள்ளிமான் ஒன்று வழி தவறி கிராமத்திற்குள் புகுந்துள்ளது. இதனை கண்ட ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள், மானை விரட்டிக் கடித்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி மானை மீட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து சென்றனர்.
மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தாளாளர் லோகராஜ் முன்னிலையில் தீண்டாம ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்தும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்தும் சமூகத்திற்கு எதிரான செயலில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் காவல் உதவி ஆய்வாளர் அமுதா பங்கேற்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியைச் சேர்ந்த சரவணன், நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்க சென்றுள்ளார்.அப்போது எரிந்த 100 ரூபாய் நோட்டு வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் வாடிக்கையாளர்கள் டெபாசிட் மிஷினில் பணத்தை செலுத்தும் போது, கிறுக்கப்பட்ட நோட்டுகள் மற்றும் கசங்கி உள்ள நோட்டுகளை வெளியே தள்ளி விடும் நிலையில், இதுபோன்ற நோட்டுகளை மிஷின் எடுத்துக்கொள்வது நியாயமற்றது என வேதனை தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..