நீங்கள் பார்க்க மறந்த உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக…!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த சிறார்கள் வேலை செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிற்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வட்டாட்சியர் அருள் செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் 1098 உதவி மைய அதிகாரிகள் செங்கல் சூளையில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு வேலைபார்த்து கொண்டிருந்த 8 சிறார்களை மீட்டு பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாநகர காவல் துறை, ரோட்டரி மெட்டல் டவுன் மற்றும் சென்னை கூத்துப்பட்டறை இணைந்து சாலை விதிகளை கடைபிடிக்காமல் செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். இந்த தத்ரூபமாக நடைபெற்ற நாடகத்தை சாலையில் சென்ற அனைவரும் நின்று கவனித்துச் சென்றனர். இந்த நிகழ்வில் மாநகர காவல் துறை கூடுதல் காவல் துணை ஆணையர் மனோகரன், வடக்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்.குருசாமி, போக்குவரத்து காவலர்கள் மற்றும் ரோட்டரி மெட்டல் டவுன் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
சென்னை நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேணி அருகேயுள்ள உரை கிணற்றில் முள்ளம்பன்றி ஒன்று தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 1மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டு துரைப்பாக்கம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். சிறப்பாக செயலாற்றிய தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணியை மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி துவக்கி வைத்தார். இதில் மாசில்லா உலகம் படைத்து மகத்துவமாய் வாழ வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளாக ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் ஆடலரசி, சுகாதார அலுவலர் டேவிட் பாஸ்கர்ராஜ் சுகாதார ஆய்வாளர் தீபன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நந்தியாற்றுக் குறுக்கே அமைந்துள்ள பாலத்தின் கீழ்பகுதியில், மர்ம நபர்கள் சிலர் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை தீயிட்டு சென்றதால் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இதுகுறித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காப்புக்காட்டிற்குள் மூன்று பசு மாடுகள், தாக்கி உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த குடியாத்தம் வனத்துறையினர், பசு மாடுகளை ஆய்வு செய்து மாட்டின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..