நீங்கள் பார்க்க மறந்த..! உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பல்லலப்பள்ளி கிராமத்தில் நியாய விலை கடை அமைத்து தரக்கோரி, அப்பகுதி மக்கள் பலமுறை மனுஅளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாததால் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னரே அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாம்பரம் அருகே போதை மத்திரைகளை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், சதீஷ்குமார், சமுவேல், மற்றும் தினேஷ் ஆகியோர் பிடிபட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு சொகுசு பேருந்து வளர்மதி சாலை அருகே இயந்திர கோளாறு காரணமாக நின்றுள்ளது. இதன் பின்னர் மாற்று பேருந்து மூலம் பயணிகள் மத்திய பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் காரணமாக இச்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அரியலூரில் மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுணர்வு மாரத்தான் விளையாட்டுப் போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாட்ச் தொடங் கிவைத்தார். இதில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் மாற்றுத்திறனாளி அரசு அதிகாரி தனது மூன்று சக்கர வாகனத்தில் மற்றவர்களுக்கு இணையாக சென்றது, பார்ப்பார்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுவிலக்கு மற்றும் ஆயத்திர்வுதுறை சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, போதைப் பொருள் புழக்கத்தை தடுப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
விருதுநகர் மாவட்டம் கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த அருண்பாண்டியன், கல்லுப்பட்டி பகுதியில் நான்கு வழி சாலையை கடக்க முயன்ற போது, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அருண்பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து காரியாபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..