நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரருக்கும் கொரோனாவா?

ஆஸ்திரேலியா சென்றுள்ள நியூசிலாந்து அணி வீரர் லூக்கி பெர்குசனுக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் பல்வேறு கிரிக்கெட் தொடர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது. இதனால் அணியுடன் மீண்டும் இணைந்தார்.

இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து வீரர் லூக்கி பெர்குசன் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவரை தற்போது தனிமைப்படுத்தி அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளதா? என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள்.

What do you think?

‘கொரோனா வைரஸ் எதிரொலி’ உச்சநீதிமன்றத்தின் அதிரடி முடிவு!

‘இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை’ பொதுமக்கள் மகிழ்ச்சி!