February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending இந்தியா விளையாட்டு

இந்தியாவை பழிதீர்த்த நியூசி, 2 – 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்!

ஆக்லாந்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி, தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கப்தில் 79 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 41 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். பின்னர் வந்த ராஸ் டெய்லர் 73 ரன்களும், டாம் பிலண்டல் 22 ரன்களும் எடுத்ததால், 50 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை எடுத்தது.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து ஒருகட்டத்தில் 200 ரன்களை கடக்குமா என்று சந்தேகம் இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து ஆடிய ராஸ் டெய்லர் 250 ரன்களை கடக்க காரணமாக இருந்தார். வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா 10 ஓவர்களில் விக்கெட் எதுவும் கைப்பற்றாமல் 64 ரன்களை விட்டுக்கொடுத்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய யஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளையும், சர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணியில் முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கேப்டன் கோலி 15, ராகுல் 4, ஜாதவ் 9, மயங்க் அகர்வால் 3 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்ரேயாஸ் 52 ரன்களும், ஜடேஜா 55 ரன்களும், நவ்தீப் சைனி 45 ரன்களும் எடுத்தனர். 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் எடுத்த இந்திய அணி, 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அத்துடன் ஒருநாள் தொடரையும் இழந்தது.

20 ஓவர் தொடரை இழந்த நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Related posts

அவிநாசி அருகே கோர விபத்து – 20 பேர் பலி

Digital Team

தொடரும் கொரோனா வைரஸ் மரணம்; பலி எண்ணிக்கை 1662 ஆக அதிகரிப்பு

Digital Team

குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிறுத்தியது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி

Digital Team

அதிநவீன கேமராவுடன் மருத்துவமனையில் நுழைந்த நபர் – நர்சுகள் அலறியடித்து ஓட்டம்..!

Digital Team

வெளியானது ரஜினியின் மேன் vs வைல்ட் மோஷன் போஸ்டர் – #ThalaivaOnDiscovery

Digital Team

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எம்.பி., நவாஸ்கனி ஆறுதல்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam