சென்னையில் அடுத்த 2 மணி நேரம்..!! 8 மாவட்டங்களுக்கு அலார்ட்..!! நம்ப இடியமின் சொன்ன அப்டேட்..?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடிக்கும் வெயிலில் மழை பெய்து வருவதால் மக்கள் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் அடுத்த 2மணி நேரத்திற்கு தமிழகத்தில் குறிப்பிட்ட சில 8 மாவட்டங்களில் மட்டும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அடுத்த 7 நாட்களை பொறுத்த வரையில், தென் பகுதிகளில் மேல் மண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை வேக மாறுபடு நிலவும். எனவே குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும். எனவே, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 14 மற்றும் 15ம் தேதிகளில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களை சுற்றியுள்ள இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 16 முதல் 18ம் தேதி வரை தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதனை தொடர்ந்து அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் லேசான மழை முதல் மிதமான மழையும் ஏப்ரல் 16க்கு பிறகு அதிக பட்ச வெப்பநிலை காணக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில பகுதிகளில் லேசான மழையுடனும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 – 36 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாக 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் காணப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல அடுத்த 2 மணி நேரத்திற்கு, மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் மதியம் 1 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். எனவே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பிருப்பதால் அந்த பகுதிகளுக்கு மஞ்சள் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும், அடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையாக ஒருசில இடங்களில் 2° – 3° செல்சியஸ் வரை இருக்ககூடும் அதாவது இயல்பை விட அதிகமாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வழக்கமான வெப்பநிலையும் இருக்கக்கூடும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..