மசாலா முட்டை தோசை ரெசிபி..!
தோசை என்ற உணவு வகை பலவித சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இதில் வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளது, அத்தகைய தோசையை நாம் வித விதமாக செய்து பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
முட்டை செய்ய
- நான்கு முட்டை
- எண்ணெய்
- கடுகு
- கருவேப்பிலை
- இரண்டு பெரிய வெங்காயம்
- இரண்டு பச்சை மிளகாய்
- இரண்டு தக்காளி
- மஞ்சள் தூள்
- ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- அரை டீஸ்பூன் மல்லித்தூள்
- அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- உப்பு
- அரை டீஸ்பூன் கரம் மசாலா
- மிளகு தூள்
தோசை செய்ய
- தோசை மாவு
- எண்ணெய்
- செய்து வைத்த முட்டை மசாலா கொத்தமல்லி இலை
- ஒரு பெரிய வெங்காயம்
செய்முறை:
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
- அடுத்தது நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக மசிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
- பின் மசாலா தூள் வகைகளை சேர்த்து வதக்கி முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக உதிரியாக வரும் வரை மிதமான தீயில் கிளறி விட வேண்டும்.
- பின் மிளகுத்தூள் சேர்த்து கலந்துவிட்டு அடுப்பை அணைக்கவும்.
- ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தோசை ஊற்றி எண்ணெய் தடவி தயாரித்த முட்டை கலவை மற்றும் நறுக்கிய வெங்காயம் வைத்து மிதமான தீயில் இருபுறமும் வேகவைத்து எடுக்க வேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான முட்டை மசாலா தோசை தயார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.