ADVERTISEMENT
கிராமத்து ஸ்டைலில் அரைத்து வைத்த மீன் குழம்பு..!
மீனை சாப்பிடுவதினால் அதிகபடியான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கிறது இதனால் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கிறது.
மீனை எண்ணெயில் சேர்த்து பொரித்து சாப்பிடுவதை காட்டிலும் மீன் குழம்பு செய்து சாப்பிடும்போது அது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் இதுமாதிரி கிராமத்து ஸ்டைலில் அரைத்து வைத்த மீன் குழம்பு செய்யும்போது அது இருக்கும் சுவையே தனிதான்.
தேவையான பொருட்கள்:
- ஒரு கிலோ மீன்
- எண்ணெய்
- பத்து பூண்டு
- எட்டு சின்ன வெங்காயம்
- ஒரு ஸ்பூன் சோம்பு
- ஒரு ஸ்பூன் மிளகு
- ஒரு ஸ்பூன் சீரகம்
- 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 3 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் ஒரு தக்காளி
- உப்பு
- புளி
- அரைக்கப் தேங்காய் துருவல்
தாளிப்பதற்கு:
- எண்ணெய்
- அரை டீஸ்பூன் வெந்தயம்
- ஒரு டீஸ்பூன் கடுகு
- 15 சின்ன வெங்காயம்
- 11/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- கருவேப்பிலை
- இரண்டு பச்சை மிளகாய்
- கால் டீஸ்பூன் மஞ்சள்தூள்
- ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
செய்முறை:
- மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவிக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
- வதங்கியதும் சீரகம், மிளகு, சோம்பு சேர்த்து தாளித்து பின் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
- அடுத்ததாக துருவிய தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
- வதக்கியவற்றை ஒரு தட்டில் மாற்றி ஆறவைக்க வேண்டும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் புளிக்கரைசலை சேர்த்து தேவையான அளவில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
- பின் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
- அடுத்ததாக இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், புளிக்கரைசல் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- குழம்பு சுண்டி வந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள மீன் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும்.
- கடைசியாக கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கி பின் குழம்பில் சேர்த்து கலந்து இறக்க வேண்டும்.
- அவ்வளவுதான் அரைத்து வைத்த மீன் குழம்பு சுவையாக தயார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.