இன்று அமாவாசைக்கு இளநீர் பாயாசம் செய்து படைங்க..!
தேவையான பொருட்கள்:
இளநீர் 2 கப்
இளநீர் வழுக்கை 1 கப் நறுக்கியது
தேங்காய் பால் 1 கப்
இனிப்பு 1/2 கப்
ஏலக்காய்த்தூள் 1/4 ஸ்பூன்
குங்குமப்பூ ஒரு சிட்டிகை
நெய் 1 ஸ்பூன்
முந்திரி, திராட்சை, பாதாம் நறுக்கியது
செய்முறை:
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் அதில் இளநீரை ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
பின் அதில் இனிப்பு சேர்த்து நன்றாக கரையும்படி கிளறி விட வேண்டும்.
அடுத்ததாக நறுக்கிய இளநீர் வழுக்கையை அதில் சேர்த்து கலந்து விட வேண்டும்.
பிறகு தேங்காய் பாலை இதில் ஊற்றி கலந்து விட வேண்டும்.
பின் அதில் ஏலக்காய்த்தூள் மற்றும் குங்குமபூ சேர்த்து கலந்து விட வேண்டும்.
அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
ஒரு சிறிய வாணலை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை வறுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்த பொருட்களை பாயாசத்தில் சேர்த்து கலந்து விட வேண்டும்.
அவ்வளவுதான் சூப்பரான இளநீர் பாயாசம் தயார்.
இன்னிக்கு இப்படி பாயாசம் செய்து அமாவாசைக்கு படைத்துவிட்டு பசங்களுக்கு கொடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க..