காளான் பிரியாணி ரெசிபி..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
தேவையான பொருட்கள்:
- காளான் – 1/2 கிலோ
- பாசுமதி அரிசி – 2 கப்
- வெங்காயம் – 1 (வெட்டியது)
- தக்காளி – 2 (வெட்டியது)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
- கொத்தமல்லி – 1/4 கப் (வெட்டியது)
- புதினா – 1/4 கப் (வெட்டியது)
- பச்சை மிளகாய் – 3 (வெட்டியது)
- எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
- நெய் – 3 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் பால் – 1/2 கப்
- தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- மல்லி தூள் – 2 டீஸ்பூன்
- சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- பிரியாணி இலை – 1
- ஏலக்காய் – 3
- இலவங்கம் – 2
- கிராம்பு – 5
- தண்ணீர் – 3 கப்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் அரிசியை சுத்தமாக கழுவி பின் எலுமிச்சை சாற்றை அதில் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- கசகசாவை முதலில் நீரில் ஊறவைத்து பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொண்டு அதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து அரைத்துக் கொண்டு பின் வெங்காயம் மற்றும் மிளகாயையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- காளானை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் ஏலக்காய், கிராம்பு, இலவங்கம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும் சூடானதும் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி பின் நறுக்கிய காளான் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக தக்காளி சேர்க்கவும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அரைத்த முந்திரி, கசகசா விழுது சேர்த்து வதக்கவும்.
- அடுத்ததாக அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பிறகு மசாலா பொடிகளை எல்லாம் சேர்க்கவும். அத்துடன் தயிர் சேர்த்து கிளறவும்.
- பின் தேவையான அளவு உப்பு, நெய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
- தேங்காய் பாலை சேர்த்து கிளறி விடவும்.
- பின் ஊறவைத்த அரிசியை சேர்த்து கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 15 நிமிடங்களுக்கு அடுப்பை சிம்மில் வைத்து வேகவைக்கவும்.
- பின் குக்கரை திறந்து பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி கிளறி விட வேண்டும்.
- அவ்வளவுதான் மணமான காளான் பிரியாணி தயார். சாப்பிட்டு மகிழுங்கள்.