காளி மசூர் புலாவ் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
மசூர்ப ருப்பு 2 கப்
பாஸ்மதி அரிசி 2 கப்
சீரகம் 1 ஸ்பூன்
வெங்காயம் 1
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் 1 ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
பட்டை 1
ஏலக்காய் 4
பிரியாணி இலை 1
கிராம்பு 4
உப்பு
நெய்
கொத்தமல்லி இலை
செய்முறை:
கருப்பு பருப்பை நீரில் அலசி 8 மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து அதனை 30 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்ததாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். மேலும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூல், கரம் மசாலாதூள், கொத்தமல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் ஊறவைத்த பருப்பை சேர்த்து கலந்து விடவும்.
அடுத்ததாக ஊறவைத்த அரிசியை சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் விட்டு கலந்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி கிளறி விட வேண்டும்.
