‘வெள்ளிக்கிழமை தூக்கு’ சர்வதேச நீதிமன்றத்தை நாடிய நிர்பயா வழக்கு குற்றவாளிகள்!

வெள்ளிக்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

நாட்டையே உலுக்கிய சம்பவங்களில் முக்கியமானது டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தான்.

இந்த வழக்கில் குற்றவாளிகளான முகே‌‌ஷ்குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌‌ஷய்குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் துக்கு தண்டனை வழங்கப்பட்டு அது மூன்று முறை தள்ளிபோடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) காலை 5.30 மணிக்கு தூக்கிலிடும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் குற்றவாளிகளில் முகேஷ் குமாரை தவிர மீதமுள்ள 3 பேரும் சர்வதேச நீதிமன்றத்தில் தங்களுக்கு வழங்கப்பட உள்ள தூக்குதண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி முறையீடு செய்துள்ளனர். இதனால் இவர்களது தூக்கு தண்டனையை நிறைவேற்றும் தேதி மீண்டும் தள்ளிப்போகலாம் என்று சொல்லப்படுகிறது.

What do you think?

‘2021ல் நாங்க தான்’ சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு