‘ஓவியம், உடல் உறுப்பு தானம்’ நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கடைசி ஆசைகள்!

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்று மரணம் அடைந்த 4 பேரின் கடைசி ஆசை என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ராம் சிங் என்பவர் சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல், 18 வயதுக்குட்பட்ட ஒருவர், மூன்றாண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.

மீதமுள்ள 4 குற்றவாளிகளான முகே‌‌ஷ்குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌‌ஷய்குமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு அது மூன்று முறை தள்ளிபோடப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை டெல்லி திஹார் சிறையில் இந்த 4 குற்றவாளிகளுக்கும் வழங்கப்பட்ட தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பொதுவாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக அந்த கைதியின் கடைசி ஆசை என்ன இரு கேட்பது வழக்கம் அந்த வகையில் இந்த குற்றவாளிகள் தங்களது கடைசி ஆசையாக என்ன கூறினார்கள் என்பது குறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி, குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய விரும்பி, அதை அதிகாரிகளுக்கு எழுத்துபூர்வமாக வழங்கியுள்ளார். அதே போல் மற்றோரு குற்றவாளியான வினய் சர்மா தான் வரைந்த ஓவியங்களை சிறையிலேயே வைக்க வேண்டும் என்றும் மேலும், அனுமன் சாலிசாவும் (அனுமன் மந்திரம்) தன்னுடன் வைத்திருந்த ஒரு புகைப்படமும் தனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மீதமுள்ள 2 குற்றவாளிகளான பவன் குப்தாவும், அக்‌ஷய் சிங்கும் எந்த ஆசையையும் வெளிப்படுத்தவில்லை. அதிகாலை 4:45 முதல் 5 மணியளவில், மாவட்ட நீதிபதி நேஹால் பன்சால் குற்றவாளிகள் நான்கு பேரின் அறைக்கும் சென்று அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தி அதை எழுத்துபூர்வமாக பெற்றுள்ளார். அதன்பின்பு அரைமணி நேரத்திற்கு பிறகு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What do you think?

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

இந்தியாவில் 300ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!