‘நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்’

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று டெல்லி திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் குற்றவாளிகளான முகே‌‌ஷ்குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌‌ஷய்குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு அது மூன்று முறை தள்ளிபோடப்பட்டது.

குற்றவாளிகள் 4 பேருக்கும் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவடைந்த நிலையில் மார்ச் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிடும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி இன்று அதிகாலையில் நிர்பயா தண்டனை நிறைவேற்றப்பட இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் அவர்களை தூக்கிலிடும் பணிக்காக ஹேங்மேன் பவன் ஜல்லத் நேற்று முன்தினமே திகார் சிறைக்கு வந்தார். இந்நிலையில் இன்று காலை அதிகாலை மூன்று பேரும் தூக்கிலிடப்பட்டனர். நாடே எதிர்பார்த்த வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நீதி கிடைத்துள்ளதாக பலரும் சமூகவலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

What do you think?

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு தடை!

‘7 ஆண்டுகளுக்கு பிறகு நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்’ தாமதத்திற்கு யார் காரணம் ?