நிர்மலா சீதாராமன் பதவிக்கு..? புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு..!
2024 மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மைனாரிட்டி ஆட்சி அமைக்கப்பட உள்ளதால். பாஜகவிற்கு தேர்தல் தோல்வியை விட மைனாரிட்டி ஆட்சி அமைப்பது மிக பெரிய தோல்வி என சொல்லலாம்.
பாஜக தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. பாஜகவினர் பலர் மீதும் விமர்சனங்களும் வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜகவின் தோல்விக்கு அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
அது போக பாஜக தலைவர் நிர்மலா சீதாராமன் மீது டெல்லி பாஜக தலைமை கடும் கோபத்தில் உள்ளது என சொல்லப்படுகிறது. நிர்மலா சீதாராமன் கொண்டு வந்த ஜிஎஸ்டி கொள்கையே பாஜக தோற்க முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. குறிப்பாக மக்கள் மற்றும் வியாபாரிகள் மீது மிக அதிகமாக வரி விதித்தது பாஜகவின் தோல்விக்கு மிக பெரிய அடி என சொல்லலாம்.
குறிப்பாக நிர்மலா சீதா ராமனின் செயல்பாடுகள், கோபமான பதில்கள், ஏழை மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளாதது. உட்பட பல்வேறு கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஆனால் கொங்கு மண்டலத்தில் பாஜக மண்ணை கவ்வ ஜிஎஸ்டி மட்டுமே ஒரு பெரிய காரணமாக சொல்லப்படுகிறது.
நிர்மலா சீதாராமனுக்கு எண்டு கார்டு :
பாஜக தோற்ற காரணத்தால் முதலில் நிர்மலா சீதாராமனுக்கு “எண்டு கார்டு” போட பாஜக முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு இந்த முறை அமைச்சர் பதவி உண்டு ஆனால் மத்திய நிதி அமைச்சர் பதவி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தொடக்கத்தில் வடஇந்திய எம்பிக்கள் சிலர் பெயர் இதில் அடிப்பட்டது. ஏன் நிதின் கட்கரி பெயர் கூட இதில் அடிபட்டது. ஆனால் வேறு ஒரு தமிழர்தான் நிதி அமைச்சர் ஆகிறார். அவர் ராஜ்ய சபா வழியாக நிதி அமைச்சர் ஆக உள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சரவையில் பெரிய இடமும் பொறுப்பும் இருக்காது என பாஜக தலைமையகம் தெரிவித்துள்ளது. என்ன மாதிரியான லாபி செய்தாலும் அது பலன் அளிக்காது என்று கூறுகிறார்கள்.
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகாரம் ஆகிய முக்கியமான இலாகாக்களை வைத்திருப்பவர்கள் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்களாக எம்பி பதவிகளை ஏற்பார்கள். என தகவல் வெளியாகியுள்ளது
எஃகு, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் நிலக்கரி போன்ற முக்கியமான அமைச்சரவையை கைப்பற்ற போகும் அமைச்சர்களும் இன்று பதவி ஏற்க வாய்ப்புகள் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோவில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக நீடிக்க வாய்ப்புள்ளது.
ராஜ்நாத் சிங் பாஜக
நிதின் கட்கரி பாஜக
அர்ஜுன் ராம் மேக்வால் பாஜக
சிராக் பாஸ்வான் எல்ஜேபி
எச்.டி.குமாரசாமி ஜே.டி.(எஸ்)
சர்பானந்தா சோனோவால் பாஜக
பிரகலாத் ஜோஷி பாஜக
சிவராஜ் சிங் சவுகான் பாஜக
சந்திர சேகர் பெம்மாசானி டி.டி.பி
ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு டி.டி.பி
ராம்நாத் தாக்கூர் JD(U)
லாலன் சிங் JD(U)
பிரதாப் ராவ் ஜாதவ் சிவசேனா
கே அண்ணாமலை பாஜக
அமித் ஷா பாஜக
ஜோதிராதித்ய சிந்தியா பாஜக
எம்எல் கட்டார் பாஜக
சந்திரசேகர் சௌத்ரி AJSU
ஜெயந்த் சவுத்ரி ஆர்.ஜே.டி
மன்சுக் மாண்டவியா பாஜக
அஸ்வினி வைஷ்ணவ் பாஜக
பியூஷ் கோயல் பாஜக
கிரண் ரிஜிஜு பாஜக
ரக்ஷா காட்சே பாஜக
கமல்ஜீத் செராவத் பாஜக
ராவ் இந்தர்ஜித் சிங் பாஜக
ராம்தாஸ் அத்வாலே இந்திய குடியரசுக் கட்சி
ஜிதன் ராம் மஞ்சி ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா
கிரிராஜ் சிங் பாஜக
பாண்டி சஞ்சய் பாஜக.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..