‘தொடரும் மரணம்’ சேலத்தில் நித்யானந்தாவின் சீடர் தற்கொலை!

தலைவாசல் அருகே காதல் தோல்வியால் நித்தியானந்தாவின் சீடர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இந்திரா நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் தினேஷ்குமார், பட்டதாரியான இவர் நித்தியானந்தாவின் சீடராக மாறிய பின் தனது பெயரை வீரபத்திரானந்தா என மாற்றியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு 6 மாதங்கள் மட்டுமே தினேஷ்குமார் நித்தியானந்தாவின் சீடராக இருந்தவர் என தெரிகிறது. ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய வீரபத்திரானந்தா சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பிய அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆசிரமத்தில் இருந்த சென்னையை சேர்ந்த நித்யானந்த கலாவை, தினேஷ்குமார் காதலித்து வந்ததாகவும் இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த வீரபத்திரானந்தா தற்கொலை செய்து கொண்டதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீரபத்திரானந்தா சமூகவலைதளங்களில் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே நித்தியானந்தாவின் 3 சீடர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

‘இது மிகப்பெரிய இழப்பு’ அன்பழகனின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

‘கொரோனாவால் என்னால் இதை கூட செய்யமுடியவில்லை’ புலம்பும் டிரம்ப்!