இங்கேயுமா நித்யானந்தா? – ‘நோ சூடு நோ சொரணை’

திருச்சி அருகே நடைபெற்ற திருமண விழாவில் நித்யானந்தாவின் புகைப்படத்துடன் கூடிய பேனர் வைத்து, தங்களது வித்தியாசமான ஆசையை அப்பகுதி இளைஞர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

நித்யானந்தா கைலாசம் போனாலும் அவரை தமிழக இளைஞர்கள் விடுவதாக தெரியவில்லை. அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நித்யானந்தா தற்போது எங்கு இருக்கிறார் என்பது இந்திய அரசுக்கே தெரியாது. ஆனால், அவர் இளைஞர்களின் நெஞ்சில் நிரந்தரமாக குடியேறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு சான்றாக திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள பல்லவபுரம் கிராமத்தில் நடந்தேறியுள்ள சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல்லவபுரம் கிராமத்தில் உள்ள இளவரசன், விஜி ஆகியோரது திருமணம் இன்று நடைபெற்றது. இதற்கு வாழ்த்து தெரிவித்து மணமக்களின் நண்பர்கள் வைத்திருந்த பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நித்யானந்தா புகைப்படத்துடன் இருந்த பேனரில், அவரது டிரேட் மார்க் வசனமான ‘நோ சூடு நோ சொரணை’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து பேனர் வைத்த இளைஞர்களிடம் கேட்டதற்கு அவர்கள் கூறிய பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நித்யானந்தா வித்தியாசமாக இருப்பதால் எங்களுக்கும் மிகவும் பிடித்துள்ளது. அவர் இருக்கும் கைலாசம் குறித்து யாரேனும் தகவல் தெரிவித்தால், நாங்களும் அங்கு செல்ல தயாரக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதைதான் நித்யானந்தா செய்கிறார். மேலும் நித்யானந்தா எப்போதுமே குதூகலமாக, ஜாலியாக இருக்கிறார் இது எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்துள்ளது. நோ சூடு நோ சொரணை’ என்று நித்தியானந்தா அடிக்கடி கூறுவார். அது எங்களுக்கு பிடித்துள்ளது. என கூறியுள்ளனர். தற்போது இந்த நித்யானந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

What do you think?

மும்பையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல்..!

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஜி.எஸ்.டி வரி – நிர்மலா சீதாராமன்