“கொரோனா வைரஸ்க்கு நித்யானந்தாவிடம் மருந்து இருக்கு”..?

சீனாவில் பரவிய கொரோனா வைரஸை அழிக்க, சர்ச்சை சாமியார் நித்யானந்தா ஆலோசனை கூறியுள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கொரோனா வைரஸால் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரஸ் பாதிப்பால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த கொடூர வைரஸ்க்கு, இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், சர்ச்சை சாமியார் நித்யானந்தா கொரோனா வைரஸை அழிக்க ஆலோசனை வழங்கியிருப்பதாக, வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ‘ஓம் நித்யானந்த பரமசிவோகம்’ என தொடர்ந்து இடைவிடாமல் பிரார்த்தனை செய்தால் கொரோனாவை அழிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

What do you think?

‘தசாவதாரம்’ கமலுக்கு சவால் விடும் ‘கோப்ரா’ விக்ரம்!!!

தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர்