நிதி ஆயோக் கூட்டம்..! 6 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு..! பழி வாங்கும் அரசு..!
மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 6 மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நிதி ஆயோக் கூட்டத்தை இந்தியா கூட்டணி தலைவர்கள் புறக்கணிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளபோவதில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அவரை தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலபிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சுகு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தலைநகரில் @NITIAayog கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில்…#UnfairBudget4TN pic.twitter.com/L2rqtORNvD
— M.K.Stalin (@mkstalin) July 27, 2024
ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதை நான் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருகிறேன். ஒரு நல்ல அரசு என்றால் வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்க மறுத்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும். இதைதான் தமிழ்நாடு அரசு செய்து கொண்டு இருக்கிறது. ஏன், மோடி தலைமையிலான பாஜக. அரசு வருவதற்கு முன்பு இருந்த ஒன்றிய அரசும் கூட இப்படித்தான் செயல்பட்டு கொண்டு இருந்தது.
ஆனால், பாஜக அதை இழந்துவிட்டது என சொல்லலாம்., பாஜக மட்டும் தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்தி வருகிறது. அதற்கு அடையாளம் தான், கடந்த 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தாக்கல், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பாஜகவை பல்வேறு மாநில மக்களும் புறக்கணித்துள்ளார்கள்.
அப்படி புறக்கணித்த மாநில மக்களைப் பழிவாங்கும் நோக்கில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. என சொல்லலாம். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் தாக்குதலில் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காக உருவாக்கப்பட வேண்டிய பட்ஜெட்டை “இந்திய கூட்டணிக்கு” வாக்களித்த மக்களைப் பழிவாங்கும் நோக்கில் உருவாக்கி இருக்கிறார். இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பதவிப் பிரமாணத்திற்கு முரணான ஒன்று என சொல்லலாம்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..