அடுத்த 3 நாட்களுக்கு இந்த பகுதிக்கு செல்ல தடை..!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!!
ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றதுடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் மழை பெய்து வந்தாலும் ஒரு சில பகுதிகளில் கோடை வெயில் நம்மை வாட்டி வதைக்கிறது., இதனால் பொதுமக்கள் குளிர் பிரேதசமான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி கோத்தகிரியில் உள்ள தொட்டபெட்டாவிற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.. தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல கோத்தகிரி சாலையில் இருந்து 3 கி.மீ, தூரத்திற்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை வழியாக மட்டுமே பயணிக்க முடியும்.
கடந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கான வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்ய பாஸ்ட் டேக் மின்னணு பரிவர்த்தனை தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.
அதற்காக பயணிகளும் கட்டணம் செலுத்தினாலும் போக்குவரத்து நெரிசல் பாதிக்கப்பட்டது.., இதனால் கட்டணம் செலுத்துவதற்கான இடம் மாற்றப்படலாம் எனவும் ஒரு தகவல் வெளியானது..
எனவே அதற்கான பணிகள் இன்று தொடங்கி இருப்பதால் இன்னும் 7 நாட்களுக்கு தொட்டப்பெட்ட சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘’தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலை நுழைவு வாயில் பகுதியில் உள்ள பாஸ்ட் டேக் சோதனை சாவடியை போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் பொருட்டு மாற்றியமைக்கும் பணிகள் நடைபெறுவதால் 16ம்தேதி முதல் 22ம் தேதி வரை தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை’’ என்றனர்.
மேலும் கனமழை பெய்து வருவதால் மலை பிரேதசங்களில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இன்னும் 3 நாட்களுக்கு நீலகிரி வனப்பகுதிக்குள் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்..