உலக பணக்காரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானியின் அன்டாலியா வீடு 15,000 கோடி மதிப்பு கொண்டது. மும்பையிலுள்ள இந்த வீடு 27 மாடிகள் கொண்டது. 173 மீட்டர் உயரம் கொண்ட கட்டடம். ரிக்டர் 8 அளவில் பூகம்பம் வந்தாலும் இந்த கட்டம் அசைந்து கொடுக்காது. 4 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த வீட்டில் 3 ஹெலிகாப்டர்கள் தளங்கள் உள்ளன. கடந்த 2008 ம் ஆண்டு இந்த கட்டடத்தின் கட்டுமானம் தொடங்கியது. இரு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
இந்த வீட்டின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? இந்த கட்டத்தில் ஏ.சி என்பதே கிடையாது என்பதுதான்.
அதாவது, இந்த வீடு கட்டப்பட்டுள்ள மார்பிள்கள் மற்றும் கட்டத்துக்குள் வைக்கப்பட்டுள்ள அரியவகை செடிகொடிகளால் இயற்கையாகவே உள்ளே அதிக குளிச்சி நிலவுமாம். இதனால், இந்த கட்டத்துக்கு எந்த வகையிலும் ஏசி தேவை படாத வகையில் கட்டப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடிகையும் மாடலுமான ஷ்ரேயா, ஆன்லியா கட்டத்துக்குள் ஒரு பேட்டிக்கா சென்றுள்ளார். உள்ளே நுழைந்ததும் அதிகளவில் குளிராக இருந்துள்ளது. உடனே, அவர் அங்கிருந்த ஊழியர் ஒருவரை அழைத்து ஏசியை குறைக்க முடியுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அந்த ஊழியர், வீட்டில் ஏசி கிடையாது. உள்ளே வைக்கப்பட்டிருக்கும் செடிகொடிகள், மலர் செடிகளால் இந்த குளிர்ச்சி ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.
இந்த வீட்டின் 27வது மாடியில்தான் அம்பானி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வசிக்கின்றனர். 600 பணியாளர்கள் இந்த வீட்டில் பணியாற்றுகின்றனர்.