வந்தே பாரத் ரயிலில் இனி காவி நிறம்..! காரணம் ஏன் தெரியுமா..?
வந்தே பாரத் ரயில்களில் வெளிப்புறம் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது அதற்கு காரணம் சென்னையில் உள்ள ஐ.சி.எப் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்ற மத்திய அமைச்சர் அஸ்வினி , காவி நிறத்தில் தயாராகி வரும் ரயிலில் ஏறி பார்வையிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர், இந்திய மூவர்ண கொடியின் அடையாளமாக காவி நிறத்தில் இந்த ரயிலுக்கு வண்ணம் பூசப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு அம்சங்கள், ரயில்வே உள்கட்ட அமைப்புகள் ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் ரயில் அட்டவணை மாற்றம் என அனைத்து மாற்றங்கள் குறித்து மத்திய அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயிலில் ஏசி இயந்திரங்கள், கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை விரிவு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் மக்களுக்கு ரயில்களின் பயன் பாடு குறித்து பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு குளிர்சாதன வசதி கொண்ட ரயில்களில் தள்ளுபடி கட்டண திட்டத்தை அறிமுக படுத்த ரயில்வே நிர்வாகிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என அமைச்சர் முடிவு செய்துள்ளார்.
அனுபூதி மற்றும் விஸ்டாடோம் பெட்டிகள் (anubhuti and vistadome coaches) உட்பட குளிர்சாதன இருக்கை வசதி கொண்ட அனைத்து ரயில்களின் ஏசி சேர் மற்றும் உயர் பிரிவு சொகுசு வகுப்புகளுக்கு இந்த திட்டம் பொருந்தும், இதில் அடிப்படை கட்டணத்தில் அதிகபட்சம் 25 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். முன்பதிவு கட்டணம் , சூப்பர் பாஸ்ட் சார்சார்ஜ், ஜி.எஸ்.டி போன்ற பிற கட்டணங்களுக்கு தனி தனியாக விதிக்கப்படும். பதிவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் தள்ளுபடி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.